காஞ்சிபுரம் மாநகராட்சி சுயேச்சை வேட்பாளர் கயல்விழி திமுகவில் ஐக்கியம்

காஞ்சிபுரம் மாநகராட்சி சுயேச்சை வேட்பாளர் கயல்விழி திமுகவில் ஐக்கியம்
X

திமுகவில் இணைந்து கொண்ட சுயேச்சை வெற்றி வேட்பாளர் கயல்விழி சூசை.

காஞ்சிபுரம் மாநகராட்சி 46 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் கயல்விழி சூசை மாவட்ட செயலாளர் க.சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 46 வது வார்டில் திமுக சார்பில் லைலா காண்டீபன், அதிமுக சார்பில் கல்பனா புகழேந்தி, சுயேச்சைகளாக அகிலாண்டேஸ்வரி டேவிட், கயல்விழி சூசை ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சுயேச்சை வேட்பாளர் கயல்விழி சூசை, திமுக வேட்பாளர் லைலா கான்டீபனை விட 550 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இன்று திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் முன்னிலையில் கயல்விழி சூசை, திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!