மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சரியாக மூடப்படாத மழை நீர் வடிகால் வாய்க்கால்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சரியாக மூடப்படாத மழை நீர் வடிகால் வாய்க்கால்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள கூட்டுறவு துறை அலுவலக நுழைவு வாயிலில் மூடப்படாத கால்வாய் பகுதியை பேனர் கொண்டு மூடப்பட்டுள்ள காட்சி..

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட மழைநீர் வடிகால் நடைமேடை பாதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு டைல்ஸ் ஒட்டபட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நடைபாதை மேடையை சரியாக மூடாததால் அருகில் உள்ள கூட்டுறவு துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி பேனர் வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தும் காட்சிகள் அதிர்ச்சி அடைய செய்தது..

தமிழகத்தில் நாள்தோறும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் பெரும் சமூக வலைதள விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தார் சாலைகளின் நடுவே மின்கம்பம் , ரசாயனம் கலந்த நுரை பொங்குதலை போக்க தடுப்பு வேலிகள் அமைத்தல் உள்ளிட்டவை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கூட்டுறவு துறை வளாகத்தை ஒட்டி மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மேல் பாதசாரிகள் நடக்கும் வகையில் பாதுகாப்பாக டைல்ஸ் ஒட்டப்பட்டு ஆங்காங்கே சிறு இடைவெளி விடப்பட்டது கழிவுகளை அகற்ற என்று நினைத்த நிலையில் அதை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளது பொது மக்களுக்கு பெரும் பேராபத்தை உண்டாக்கும்.

ஒரு பக்கம் முறையாக மூடிவிட்டு மறுபக்கம் முற்றிலும் ஓபன் செய்து வைத்துள்ளது இரவு நேரங்களில் தவறு பெரும் வாய்ப்பாக அமையும்.

இந்நிலையில் இன்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் வருகை இருப்பதால் அப்பகுதியில் திறந்து உள்ள கால்வாய் பேனர் கொண்டு மூடி பொது மக்களை காப்பதாக சிறு முயற்சி மேற்கொண்டனர்.

இதை கவனிக்காமல் சென்றால் மீண்டும் ஆபத்து ஏற்படும் என்பதும் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலரிடம் கேட்டபோது அது மாநகராட்சி பராமரிக்கும் மழைநீர் கால்வாய் எனவும் , மூடி போட்டு மூட அவர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்