வானிலை மாற்றம் காரணமாக காஞ்சிபுரத்தில் கன மழை..!
கொட்டும் மழையிலும் பாதுகாப்பாக செல்லும் மூத்த குடிமக்கள்.
காஞ்சிபுரத்தில் வானிலை மற்றும் காரணமாக திடீர் கன மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு கனமழை இருக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மண்டலம் அறிவித்திருந்தது. அவ்வகையில் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரத்தில் மழை இல்லாத நிலையில் இன்று காலை 6 மணியளவில் லேசான சாரல் மழையுடன் துவங்கியது.
தொடர்ந்து கனமழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான வாலாஜாபாத் உத்தரமேரூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. திடீர் மழை காரணமாக பணிக்கு செல்ல வந்த தொழிலாளர்கள் பள்ளி மாணவர்கள் என பல மழையில் நனைந்தபடியே சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தவறிய நிலையில், தற்போது மழை பெய்து வருவது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி அடைய செய்தது. காலை முதல் பெய்து வந்த மழை நிலவரம். காஞ்சிபுரத்தில் 25 மில்லி மீட்டர் ஸ்ரீபெரும்புதூரில் 18 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கம் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒன்பது மில்லி மீட்டர் உத்திரமேரூர் வாலாஜாபாத் பகுதிகளில் தலா இரண்டு மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது .
காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 45 ஏரி முழு கொள்ளளவையும் , 75 சதவீதம் 29 ஏரிகளும் , 50 சதவீதம் 61 ஏரிகளும் , 25 சதவீதம் 175 ஏரிகளும், 20% கீழ் 71 ஏரிகளும் நீர் நிரம்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu