ஓரத்தூர் நீர்தேக்கம் பணி நிறைவு பெறாததால் வீணாகிய மழைநீர்..!
பாதி பணிகள் முடிவுற்ற நிலையில் ஓரத்தூர் நீர்தேக்கம்.
ஓரத்தூர் நீர் தேக்கம் தொடர்பாக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஆண்டுதோறும் பல லட்சம் கன அடி நீர் வீணாகிறது. ஆண்டு தோறும் கடலில் வீணாவது தொடர்கதையாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கொளத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றின் கிளை கால்வாய் துவங்குகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 30-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் இந்த கிளை கால்வாய் வழியே வரதராஜபுரம் பகுதியை கடந்து சென்னை பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
வெள்ள பாதிப்பை குறைக்கவும், வீணாகும் மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் ஒரத்தூர் அடையாறு கிளை கால்வாய் குறுக்கே ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் கிராம ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்க பொதுப்பணி துறையினர் திட்டமிட்டனர். இதை எடுத்து 2019ல் அதிமுக ஆட்சியில் 55.85 கோடி ரூபாய் மதிப்பில் வருதோ நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் துவங்கியது.
763 ஏக்கர் நீர் பரப்புடன் ஒரு டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் வகையில் இந்த நீர் தேக்கம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நீர் தேக்கம் அமையும் அடையாறு கால்வாய் குறுக்கே 5 கண் மதகு அமைக்கப்பட்டுள்ளது இங்கிருந்து ஆரம்பாக்கம் ஏரி வரை நீர்த்தேக்கத்தின் ஒரு புறம் கரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் ஐந்து கண் மறதியில் இருந்து ஒரத்தூர் ஏரி வரை கரையமைக்க 84 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஒரத்தூர் நீர்த்தேக்கம் அமைய நிலம் கையகப்படுவதற்கு முன்பாக நீர்த்தேக்கத்தின் உள்ளே செல்லும் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய இரண்டு ஏரிக்கரைகள் கடந்த 2020இல் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை சேர்க்க முடியாமல் வெளியேறியது.
இதை தடுக்க ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரியின் கரை அகற்றிய பகுதிகளில் மண் கொட்டி தற்காலிக கரை அமைக்கப்பட்டது. எனினும் 2021 இல் பெய்த கனமழையில் கரைகள் உடைப்பு ஏற்பட்டு ஒரத்தூரில் பயிரிடப்பட்ட 250 ஏக்கர் விவசாய நிலத்தில் உபரி நீர் புகுந்து நெற்பயிர் மூழ்கி நாசமானது.
இதனையடுத்து கரைப்பகுதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வெள்ள நீர் செல்வதற்கு வசதியாக சிறிய கரை மூலம் உபரி நீர் அடையாறு கிளை கால்வாயில் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெறாததால் இந்த ஆண்டு பெய்த மிக்ஜாம் புயல் காரணமாக மீண்டும் சுமார் இரண்டு டிஎம்சி நீர் வெளியேறியது.
இந்த கரையை கட்ட இந்த ஆண்டு படகுகள் மூலம் 7000 மணல் மூட்டைகள் 6 டன் சவுக்கு கட்டைகள் 180 ஆட்கள் மூலம் நான்கு நாட்கள் இதனை தடுக்க போராட்டம் நடைபெற்றது. இதற்காக சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
வரும் ஆண்டிற்குள் ஆவது இதனை விரைவாக கட்டி அப்பகுதியில் வெள்ள நீர் புகுவது தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu