மூதாட்டியிடம் நூதன முறையில் 7 சவரன் நகைகள் பறிப்பு

மூதாட்டியிடம் நூதன முறையில் 7 சவரன் நகைகள் பறிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மூதாட்டியிடம் நூதன முறையில் 7 சவரன் நகைகளை பறித்த இரு பெண்கள் ஆட்டோவில் தப்பினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுக்கா கவந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆண்டாள். இவர் தனது காஞ்சிபுரம் விவேகானந்தா நகரில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்தபோது, கீரை மண்டபத்தில் இறங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

இவரைப் பின்தொடர்ந்து வந்த இரு பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூதாட்டி இறங்கும்போது அவரது சேலையை ஒருபெண் மிதித்து அவரது கவனத்தை திசை திருப்பியுள்ளார். மற்றொரு பெண் அவரது கைப்பையில் இருந்த 7 சவரன் நகையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஆட்டோவில் தலைமறைவாகினர்.

இதிலிருந்து மீண்டு சிறிது நேரம் கழித்து மூதாட்டி தனது பையை பார்க்கும் போது திறந்து கிடந்ததாகவும், அதிலிருந்த பர்சை காணவில்லை என்றும் அதில் இருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!