100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை வழங்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை வழங்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவலன் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக முறையாக பணம் வழங்கவில்லை.

காஞ்சிபுரத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

கிராம வளர்ச்சியை கொண்டு திட்டம் முழுமையாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கீழ் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இதனை செயல்படுத்தி வருகிறது.

இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதும் வழக்கமாக இருந்து வந்தது.

தற்போது கடந்த மூன்று மாதங்களாக இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனவும் மத்திய அரசு உடனடியாக இதற்கான தொகையை விடுவிக்க வேண்டும் எனவும் முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் லாரன்ஸ் தலைமையில் காவலன் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மூன்று மாத காலமாக சம்பளம் வாங்காமல் இருக்கும் சம்பளத்தை உடனடியாக இழப்பீட்டுத் தொகையுடன் வழங்குதல் பண்டிகை காலம் நெருங்குவதால் சம்பள பாக்கி விடுவித்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வாய்ப்பு இருக்கும் எனவும், மத்திய அரசு திட்டத்தை முடக்க நினைப்பதை கைவிட வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதே போன்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் உடனடியாக தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டிய நிலையில் அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரி எழுந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!