காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை..இடிந்து விழுவும் நிலையில் இருளர் குடியிருப்புகள்...
இருளர் குடியிருப்பில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் குடியிருப்பு வாசிகள்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுதுதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 12 நாட்களில் காஞ்சிபுரம் பகுதியில் 253 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 264 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 387 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 178 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 348 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 413 மில்லி மீட்டர் என மொத்தம் 1844 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் 40 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 32 மில்லி மீட்டர் , உத்தரமேரூரில் 169 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 17 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 61 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 89 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் கடந்த 12 நாட்களாக 252 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் சில குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே மழை நீர் தேங்கியது. இதனை மாநகராட்சி இயந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றினர்.
காஞ்சிபுரம் ஒன்றியங்களை பொருத்தவரை எந்த கிராமப்புறங்களிலும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் சூழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் கிராமப்புற மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் குடியிருப்புகள் கனமழையில் சிக்கி அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனம் அதைத்தொடர்ந்து அன்னை இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் குடியிருப்பு வளாகங்கள் அந்தப் பகுதியில் அமைத்து தரப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த குடியிருப்புகள் பல சேதம் அடைந்து மேல் கூரை மற்றும் விரிசல் அடைந்து மழைக் காலங்களில் நீர் குடிநீர் உள்ளே கசியம் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் பல்வேறு வகையில் அரசுக்கு மனுக்கள் அளித்தும், குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்தப் பகுதியில் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் நபர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தற்போது கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்பு அவர்களுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பழைய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் சேதமடைந்து எந்த நேரமும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நேற்று இரவு கூட வீட்டினில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது மேல் கூரை பூச்சு விழுந்து காயம் அடைந்துள்ளார்.
இன்னும் ஓரிரு நாள் கன மழை பெய்தால் வீடுகள் மேல் கூரை பூச்சூகள் அனைத்தும் விழும் நிலை உள்ளது. எனவே, மாவட்டம் நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையீட்டு இருளர் குடியிருப்புகள் அனைத்தையும் புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அங்கு குடியிருப்போரின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu