இவ்வளவு வசதியா ரேஷன் கடையில்! அடடே!!
வசந்தம் நகரில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கட்டிடத்தில் சிசிடிவி , தீயணைப்பு கருவி, குடிநீர் கழிவறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இது என்ன ரேஷன் கடையா ? பொழுது போக்கு இடம் போல உள்ளதே ? மாடல் நியாய விலை கடை பார்த்து அதிசயிக்கும் மக்கள்.
தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் புதிய நியாய விலை கட்டிடங்கள் கட்டப்படும், ஏற்கனவே கட்டப்பட்ட கடைகளில் வரலாற்று சின்னங்கள் வரைவது என கடந்த ஒரு ஆண்டாக தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு துறை வரலாற்றில் முதன்முறையாக மாடல் நியாய விலை கடை காஞ்சியில் ஆறு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது.
பொதுமக்கள் காத்திருக்கும் போது வெயிலில் நிற்காமல் கடைகளில் வரண்டா பகுதிகள், அமர இருக்கைகள், வைபை, கழிவறை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் வலியுறுத்தும் வகையில் வண்ண மலர் பூக்கள் செடிகள், திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்புக்காக தீயணைப்பு கருவி, மார்பிள் இருக்கை என அனைத்தும் இருக்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது இரண்டாவதாக காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிக்கு உட்பட்ட நியாய விலை கடை , வசந்தம் நகரில் ரூபாய் 18 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது. இன்று இதன் திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதைக் காண வந்த திமுக நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் வியக்கும் வகையில் இந்த நியாய விலை கடை அமைந்துள்ளது தங்கள் பகுதியிலும் இதுபோல் அமையுமா என ஏக்கத்துடனே செல்லும் வகையில் உள்ளது.
கிராமங்கள் கட்டப்பட்டுள்ள ஒரு நிலையில் நகரில் உள்ள நியாய விலை கடைகளில் இதேபோன்று கட்டிடங்கள் கட்டப்பட்டால் நல்ல வரவேற்பு பெரும் என்பதில் ஐயமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu