அங்கன்வாடியில் குழந்தைகளே இல்லையா? திறப்பு விழாவில் எம்எல்ஏ சரமாரி கேள்வி

ஆர்ப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழாவில் குழந்தைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சிறு வயது ஆரம்பிக்கும் நிலையிலே அனைவரும் சமமான கல்வி பெறவேண்டும் என்றும் நோக்கிலும், இளம் வயதில் பேச்சுத்திறன் மற்றும் சகோதரத்துவம் நிலவும் வகையில் ஆரம்பக் காலகட்டத்தில் பால்வாடி என அழைக்கப்படும் அங்கன்வாடி நிலையங்கள் தமிழக முழுதும் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2015 முதல் தொடர் கனமழை காரணமாக பல்வேறு அங்கன்வாடி மையங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் குழந்தைகள் பாதுகாப்பு கருதி புதிய கட்டிடங்கள் கட்ட பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
மேலும் பழைய பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கவும் உத்தரவிட்டது அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகறல் காவாந்தண்டலம் இளையனர் வேலூர் மற்றும் ஆர்ப்பாக்கம் பகுதியில் பல லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையங்கள் சமையலறை கழிவறை மற்றும் சாய்தள வசதி என அனைத்து நவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டது.
இப் புதிய கட்டிடத்தினை இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம் , சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடிகுமார், துணைத் தலைவர் திவ்யப்பிரியாஇளமது ஆகியோர் காலை 9 மணி முதல் அனைத்து ஊராட்சி கிராமங்களிலும் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
அவ்வகையில் ஆற்பாக்கம் ஊராட்சியில் சுமார் பதினோரு லட்சம் மதிப்பிட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராசி, துணைத்தலைவர் விஜியகுமாரிபரசுராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எம்எல்ஏ மற்றும் எம்பி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலரிடம் அங்கன்வாடி மையத்தில் எத்தனை பேர் கல்வி பயில்கிறார்கள் என்று கேட்டபோது 20 நபர்கள் என கூறியதும் எங்கே அவர்கள் என உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்ப பதில் கூறாமல் அப்படியே நின்ற காட்சி அதிர்ச்சி அளித்தது.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் 20 பேர் தான் பயில்கிறார்களா அல்லது கணக்கிற்காக எங்களிடம் அப்படி சொல்ல சொன்னார்களா என கேள்வி எழுப்பியும், பதில் கூறாமல் நின்றதால் சட்டமன்ற உறுப்பினர் விரைவாக அங்கிருந்து சென்று விட்டார்.
காலை 9 மணி முதல் அங்கன்வாடி மையங்கள் திறந்து வருவதால், நாள்தோறும் 10 மணி முதல் தான் குழந்தைகள் வருவார்கள் எனவும், இதனால்தான் குழந்தைகள் வருவது தாமதம் என அங்கிருந்த கட்சியினர் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu