புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை  திரும்ப பெறக்கோரி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்
X

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம், பெரியார் துண் அருகே CITU, LPF, INTUC, AITUS, HMS, AICTU சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3 வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட புதிய சட்டங்களை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுத்துறை மற்றும் அரசு துறைகள் தனியார்மயம்படுத்தும் கொள்கையை கைவிடுதல் , விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிபடுத்தல், புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச பொது செயலாளர் சுந்தரவரதன், இளங்கோவன், எம்.சுதாகரன் , CITU செயலாளர் முத்துகுமார், டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் ரவி மற்றும் பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!