காஞ்சிபுரம் ‌: சிறப்பு முகாமில் 6600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!

காஞ்சிபுரம் ‌: சிறப்பு  முகாமில் 6600 பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டது..!
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் நடைபெற்ற 44 தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 6600 நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாள் தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் 44 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி ஆலோசனை பேரில் நடத்தப்பட்டது . இதில் மாவட்டம் முழுவதும் 6300 நபர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி மூலம் , 300 நபர்கள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பழனி தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் ஒரே நாளில் 6600 நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டது இதுவே முதல் முறை என தெரிய வருகிறது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 128 நபர்களுக்கு இன்று புதியதாக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் , சிகிச்சை முடிந்து 327 நபர்கள் வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare