இப்படி ஒரு மருத்துவ அதிசயம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா
டாக்டர் ரெங்காச்சாரி (பைல் படம்)
திருச்சி கல்யாணராமன் ஒரு உபன்யாசத்தில் டாக்டர் ரெங்காச்சாரியின் பிரசன்ஸ் ஆப் மைண்ட் பற்றி சிலாகித்து பேசினார். அவர் காட்டிய மிகச்சிறந்த உதாரணம் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. அதனை நம் வாசகர்களுக்கு சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.
எவ்வளவு படித்திருந்தாலும் தேவையான நேரத்தில் மூளை வேலை செய்யல சார் என்று சொல்வோர் உண்டு. சிலதெல்லாம் படிப்பு சொல்லிக்கொடுக்காது. கடவுள் அருள் தான் அந்த நேரத்தில் நாம் சரியான நடவடிக்கை எடுக்க உதவும். கடந்த 1925ம் ஆண்டு. ஆங்கிலேய ஆட்சிக்காலம். மருத்துவத்துறை அவ்வளவாக வளர்ச்சி பெறாத ஒரு காலம்.
அப்போது தமிழகத்தின் நம்பர் ஒன் டாக்டராக இருந்தார் ரெங்காச்சாரி. டாக்டர் ரெங்காச்சாரியாக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் நாள் சென்னையில் நடந்து போகும் போது ரோட்டில் மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது. அங்கு தரையில் ஒரு பெண் படுத்து அலறிக் கொண்டிருந்தார்.
அவள் கணவன் அருகில் அமர்ந்து கதறிக் கொண்டிருக்கிறான். டாக்டர் ரெங்காச்சாரி அந்த பெண்ணின் கணவனிடம் பிரச்னை என்ன என விசாரித்தார். அதற்கு அந்த கணவன் ஐயா, நான் பரம ஏழை. என்னைப்போன்ற ஏழைகளால் டாக்டர் ரங்காச்சாரி போன்ற பெரிய மருத்துவரிடம் போக வசதியில்லை. என் மனைவிக்கு பிரசவத்தில் கடும் சிக்கல் ஐயா. இரண்டு உயிர்களும் ஆபத்தில் இருக்கிறது ஐயா. என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொன்னார். அதற்கு டாக்டர் ரெங்காச்சாரி தான் யாரென்று சொல்லாமல் நான் பார்க்கட்டுமா என்று கேட்கிறார்.
கணவனோ எப்படியாவது, யாராவது என் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்றுங்கள் எனக் கேட்கிறார். டாக்டர் ரெங்காச்சாரி சென்று பார்த்த போது, கேட்டு விட்டு என்னவென்று போய் பார்க்கிறார். அந்த கணவனின் மனைவி ஒரு நிறைமாத கர்ப்பிணி. அவருக்கு பிரசவ நேரம். பிரசவம் நடக்கும் போது, குழந்தையின் கால் வெளியில் வந்து விட்டது. கொஞ்சம் தாமதித்தாலும் இரு உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதை டாக்டர் உணர்ந்து கொண்டார். அப்போது தான் அவரது பிரசன்ஸ் ஆப் மைன்ட் வேலை செய்தது.
சட்டென்று தன் கையிலிருந்த சிகரெட்டின் முனையை குழந்தையின் காலில் வைத்து அழுத்தினார். இப்போது ஸ்மார்ட் போனில் ரொட்டேட் என்று இருக்கிறதே அது போல குழந்தை சூடு தாங்காமல் காலை உள்ளே இழுத்துக் கொண்டு ரொட்டேட் ஆகி சுகப்பிரசவம் ஆகி விட்டது. தாய் சேய் இருவரும் நலமாக தப்பினர். அதற்காக எல்லா பிரசவத்தையும் சிகரெட் வைத்து பார்க்கவும் முடியாது. அந்த நேரத்தில் அப்படி ஒரு ஐடியா கடவுளையன்றி வேறு யார் கொடுக்க முடியும். அந்த சூழலில் அதனை தவிர்த்து வேறு எந்த வழியும் இல்லை. இதனை அறிந்த ஆங்கிலேய அரசு அந்த டாக்டர் எஸ்.ரெங்காச்சாரிக்கு சென்னை மருத்துவமனையில் சிலை வைத்தது. அதற்கு இந்த ஒரு சம்பவம் மட்டும் காரணம் இல்லை. இது போன்று பல சம்பவங்கள்.
இன்னொரு சம்பவம் ஒரு வரலாற்று ஆசிரியர், டாக்டர் ரெங்காச்சாரி பற்றிய கூறிய தகவலை பார்க்கலாம்.
ஒருமுறை வயிறு வீங்கிய நிலையில் ஒரு நோயாளி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். இப்போது போல் அப்போது ஸ்கேன் வசதிகளோ... சிறப்பான மருத்துவ உபகரணங்களோ இல்லை. இருந்தாலும், டாக்டர் கணித்து விட்டார். அந்த நோயாளியின் வயிற்றுக்குள் முழுவதும் ரத்தம் குடிக்கும் அட்டைகள் நிரம்பியிருந்தன. ஆம் அந்த நோயாளி தோட்டத்தில் வேலை செய்யும் போது, தோட்டத்தில் இருந்த ரத்தம் குடிக்கும் அட்டைகள் வயிற்றுக்குள் எப்படியோ சென்று விட்டது. சென்று ரத்தம் குடித்து பல்கி பெருகி விட்டது. பல ஆயிரம் அட்டைகள் வயிற்றுக்குள் இருக்கும் போது எப்படி அத்தனையும் வெளியே கொண்டு வர முடியும். வயிற்றை கிழித்தா வெளியே எடுக்க முடியும்.
அப்போது டாக்டர் ரெங்காச்சாரி ஒரு காரியம் செய்தார். நீண்ட உயரமான ஒரு ஆட்டுக்கல்லில் பிரெஷ்ஸாக ஆட்டு ரத்தத்தை உற்றினார். அந்த ஆட்டுக்கல்லில் நோயாளியை தற்போது நடைமுறையில் உள்ள பாத்ரூம் டப்பில் அமர வைப்பது போல், அந்த நோயாளியை கால்களை அகற்றி அமர வைத்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. வயிற்றுக்குள் இருந்த அட்டைப்பூச்சிகள் ஆட்டுரத்தத்தின் வாசனையை பிடித்து ஆட்டுக்கல்லுக்குள் இறங்கி விட்டன. ஆச்சர்யத்திலும், ஆச்சர்யம். வயிற்றுக்குள் இருந்த அத்தனை பூச்சிகளும் இறங்கி விட்டன. அந்த நோயாளி பிழைத்தார். இப்போது மருத்துவத்துறையில் நடக்கும் அதிசயங்களை எத்தனை பக்கங்களுக்கு வேண்டுமானாலும் எழுதலாம். அத்தனை திறமை வாய்ந்த டாக்டர்கள் வந்து விட்டனர். மருத்துவ வசதிகள் பெருகி விட்டன. ஆனால் அந்தக்காலத்தில் நடந்த இது போன்ற சம்பவங்கள் பலராலும் நினைவு கூறப்படும் போது, பல்வேறு ஆச்சர்யங்களை ஏற்படுத்தி வருகின்றன.
எஸ்.ரங்காச்சாரி என்று ஒரு டாக்டர் என்ற பந்தா இல்லாமல் சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர். நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று ரோல்ஸ் ராய்ஸ் வாங்கி பின் puss moth என்ற சிறு ரக விமானம் வாங்கி அதில் சென்று மருத்துவம் பார்த்தார். அனுதினம் 18 மணி நேர உழைப்பு. எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் டெபுடி சுப்பரின்டென்டென்ட் ஆக இருந்தவர்.
அரசு மருத்துவராக இருந்த வரை ஒரு பைசா கூட சம்பளமாக வாங்காதவர். அப்படி ஒரு சேவை மனப்பான்மை. சர்ஜரிக்காகவே பிறந்தவர் என்று சொல்லலாம்.. நீண்ட விரல்களும், க்ஷண நேரத்தில் உயிர்காக்கும் முடிவுகளை எடுக்கும் திறமையும் கொண்டு பல அசாத்தியமான அறுவை சிகிச்சைகளை செய்தவர். தான் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதையெல்லாம் மற்றவர்களுக்கு எளிமையாக சொல்லிக் கொடுத்தவர். யாரையும் கடிந்து கொள்ளாத பண்பாளர்.
இவர் சீடர் கனிப ராமஸ்வாமி என்று இவரால் பாராட்டப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பழமார்நேரி டாக்டர் பிஎஸ். ராமஸ்வாமி ஆவார். இவர் புகழ் பெற்ற வயலின் மேதை பழமார் நேரி ஶ்ரீ சுவாமிநாத அய்யரின் மூத்த மகன் ஆவார். இவர்களைப் பற்றி எந்தப் பாட்ப் புத்தகத்திலாவது மாணவர்கள் படிக்கிறார்களா? இப்படிப்பட்ட மனிதநேயர்கள் வாழ்ந்த தேசமிது.. இவர்களை பற்றியும் படிக்கலாமே..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu