இலவச பெட்ரோல்: கூட்டம் கூட்டமாக படையெடுத்த வாகன ஓட்டிகள்

இலவச பெட்ரோல்: கூட்டம் கூட்டமாக படையெடுத்த வாகன ஓட்டிகள்
X

பைல் படம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இன்று முதல் வருகின்ற 6ம் தேதி வரை ரூ.50 இலவச பெட்ரோல் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் புதிதாக ஒரு சலுகையை வெளியிட்டுள்ளனர். அதாவது வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் எண்ணை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு ஒருமுறை கடவு எண் வரும். அதனை மீண்டும் பதிவிட்டால் வாகனத்திற்கு 50 ரூபாய் பெட்ரோல் இலவசமாக பெறலாம். இந்த சலுகை இன்று முதல் 6ம் தேதி வரை உள்ளது.

இதையடுத்து நாமக்கல் அடுத்துள்ள முத்துகாப்பட்டியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்கில் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிய வந்ததால் ஏராளமானோர் பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். அதன்படி பெட்ரோல் பங்கில் மொபைல் எண்ணை பதிவு செய்து விட்டு இலவசமாக 50 ரூபாய் பெட்ரோலை வாகனங்களுக்கு நிரப்பி சென்றனர்.

மொபைல் எண்ணை பதிவு செய்து விட்டு இலவசமாக 50 ரூபாய் பெட்ரோலை நிரப்பி கொள்ளலாம் எனவும் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விட்டு பணம் செலுத்தி பெட்ரோல் நிரப்பினால், அதற்கான பாயிண்டுகள் ஏறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சலுகை தமிழகம் முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பெட்ரோல் பங்க்குளில் உள்ளதாகவும், இந்த சலுகை பெட்ரோலுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture