குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர் அறிவிப்பு

குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர் அறிவிப்பு
X

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கான உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதா மாதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்தபின்பு தமிழக நிதி நிலை மோசமாக இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. நிதிநிலை சீரானதும் குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதுகுறித்து கூறும்போது,

குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story
why is ai important to the future