கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய வாலிபர்கள் கைது

கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய வாலிபர்கள் கைது

கைது செய்யப்பட்ட நான்கு வாலிபர்களை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய நான்கு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 27). இவர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி பகுதியில் உள்ள இரும்பு கடையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 4ம் தேதி ராமன் கடையில் இருந்தார். அப்போது , மழை பெய்ததால் நான்கு வாலிபர்கள் மழையில் நனைந்தபடி கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததால், ராமன் அவர்களை கடைக்குள் வராமல் ஓரமாக நிற்கும்படி கூறினார்.

இதனால் ராமனுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ராமனை பீர் பாட்டிலால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ராமன் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் தமிழ்செல்வன் (வயது 29), அதே பகுதியை சேர்ந்த கணேசனின் மகன் வெங்கடேஷ் (வயது 29), அசோகபுரம் தேவராயன்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன் சத்தியபிரகாஷ் (வயது 24), அய்யன்காடு பகுதியை சேர்ந்த துரைசாமியின் மகன் அரவிந்த் (வயது 19) ஆகியோர் ராமனை தாக்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story