அந்தியூர் அடுத்த பர்கூரில் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

அந்தியூர் அடுத்த பர்கூரில் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
X

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் பொம்மேஸ்.

அந்தியூர் அடுத்த பர்கூரில் சாலை விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் துருசனாம்பாளையத்தை சேர்ந்தவர் மகாதேவன் மகன் பொம்மேஸ் (வயது 20). இவரது நண்பர் ஜெயக்குமார். இவர்கள் இருவரும் இன்று இரவு 8 மணியளவில் பர்கூரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பின்னர், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பர்கூர் கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பொம்மேஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து கொண்டு சென்ற ஜெயக்குமார் படுகாயமடைந்த நிலையில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பர்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தியாகராஜன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!