கொடிவேரி அருகே சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

கொடிவேரி அருகே சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
X

பைல் படம்.

கொடிவேரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கங்காநாதன் மகன் லோகநாதன் (வயது 27). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் வாட்டர் கம்பெனியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 26). இருவருக்கும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், இன்று மதியம் லோகநாதன் வீட்டிற்கு சத்தியமங்கலம் - கொடிவேரி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சின்னாட்டிபாளையம் தோட்டம் அருகே வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த மைல் கல்லின் மீது தலை மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, லோகநாதனின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் சென்ற போது தலைக்கவசம் அணியாமல் சென்றதால் தலையில் காயம் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!