ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலி

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலி
X

பைல் படம்.

ஈரோட்டில் இன்று காலை மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பெரியசேமூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). தொழிலாளி. இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் எல்லப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அதே ரோட்டில் இவருக்கு எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் எல்லப்பாளையம் சக்திநகரை சோந்த சக்தி (வயது 25) என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சோலார் நகர் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரகாசுக்கு இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சு மூலம் 2 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் பிரகாஷ் சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!