கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலி
X

மோகன்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் முழ்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வாலிபர் ஒருவர் முழ்கியதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடிய போது வாலிபரின் உடல் கிடைக்காத நிலையில், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை தேடி மீட்டனர். விசாரணையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பதும், தனியார் நிறுவன ஊழியர் என்றும் தெரியவந்தது. மேலும், சொந்த வேலை காரணமாக கோபிச்செட்டிப்பாளையத்திற்கு மோகன் மற்றும் சக நண்பர்களுடன் வந்துள்ளார். வேலை முடிந்து திரும்பும் போது, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சக நண்பர்களுடன் குளித்து கொண்டிருக்கும் போது, நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!