சித்தோடு அருகே வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு

சித்தோடு அருகே வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மாரடைப்பால் வாலிபர், உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகேயுள்ள ஆர். என். புதூர் மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது இளைய மகன் அருணாச்சலம் (வயது 28). இவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன் நெஞ்சு வலி ஏற்பட்டதில் கோவை தனியார் மருத்துவனையில் சிகி்ச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த அருணாச்சலத்துக்கு மீண்டும் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்பகுதியினர் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது ஏற்கெனவே உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story