பவானியில் வயிற்று வலி காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பவானியில் வயிற்று வலி காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

பவானியில் வயிற்று வலி பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நமக்கல் மாவட்டம், தாரங்கபாடி பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. 29 வயதான இவர் ஈரோடு மாவட்டம் பவானி மேட்டூர் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக பவானியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரது நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலைக்கு பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களிடம் தூங்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இன்று காலை நீண்ட நேரம் கடந்தும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் பக்கத்து அறையில் இருந்த நண்பர் ரமேஷ் குமார் கதவை திறந்து பார்க்க சத்தியமூர்த்தி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தது தெரியவந்து.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி போலீசார் இறந்து கிடந்த சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வயிற்று வலி பிரச்சினை காரணமாக சத்தியமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!