பவானிசாகர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பவானிசாகர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

பவானிசாகர் அருகே விபத்தில் கண் பார்வை இழந்த வேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் . இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், நவீன் குமார் (வயது 27) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக ஈரோடு பவானிசாகர் மாவட்டம் அடுத்த கொத்தமங்கலம் கிராமத்தில் கோவிந்தராஜன் என்பவரின் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து நாகராஜன் விவசாயம் செய்து வந்தார். அவருடன் அவரது மகன் நவீன் குமாரும் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் நவீன் குமாருக்கு இடது கண் பார்வை முற்றிலும் பறி போய்விட்டது. வலது கண் பார்வை மட்டும் சுமாராக இருந்து வந்தது. நவீன் குமார் அடிக்கடி பார்வை பறிபோனதை எண்ணி வருத்தப்பட்டு வந்தார்.

இனிமேல் நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் என்று கூறி வருத்தப்பட்டு வந்தார். அவரை அவரது பெற்றோர் ஆறுதல் படுத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து நவீன்குமார் குடித்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் கோவையில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!