அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

அந்தியூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
X

பைல் படம்.

அந்தியூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 27). இவர் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது தந்தை, தாய் கூலி வேலைக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று வேலை கிடைக்காத விரக்தியில் வீட்டில் இருந்த பூச்சிமருத்து விஷத்தை குடித்தார். இந்நிலையில், உறவினர்கள் உதவியுடன் திருஞானசம்பந்தத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே திருஞானசம்பந்தம் இறந்து விட்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!