அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்

அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் காளிதாஸ் காலனியை சேர்ந்தவர் செல்வி (வயது 38). இவருக்கு 18 வருடங்களுக்கு முன்பு, மணி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சரண்ராஜ் (22) என்ற மகன் உள்ளார்.

செல்வி கருத்து வேறுபாடு காரணமாக வெற்றிவேல் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா (16) என்ற மகள் உள்ளார். வெற்றிவேல், செல்வி, சரண்ராஜ் மற்றும் இனியா ஆகிய நான்கு பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். சரண்ராஜ் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வெற்றிவேல் மற்றும் செல்வியுடன் கோபியில் உள்ள மில்லில் வேலை செய்து வந்துள்ளனர்.

சரண்ராஜ் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு தூங்கச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இன்று காலையில் சரண்ராஜ் தனது அறையில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக சரண்ராஜை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்