பர்கூர் மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

பர்கூர் மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
X

சித்தலிங்கம்

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கொங்காடை பட்டேபாளையம் பகுதியில் வாலிபர் கஞ்சா விற்பதாக, பர்கூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் பட்டேபாளையம் பகுதியில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, பட்டேபாளையம் பகுதியைச் சேர்ந்த சித்தலிங்கம் என்பவர் தனது வீட்டின் பின்புறம் சுமார் 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சித்தலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!