கோபிசெட்டிபாளையம் அருகே இளைஞர் போக்சோ வழக்கில் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே  இளைஞர் போக்சோ வழக்கில் கைது
X

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விக்னேஷ்.

சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வசித்து வந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த 12ஆம் வகுப்பு முடித்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனிக்கு பள்ளி விடுமுறையில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது அங்கு உடன் வேலை செய்த கோபி, நாதிபாளையம், செங்கோட்டையன் நகரை சேர்ந்த ரவி என்பவரது மகன் விக்னேஷ் (23) சிறுமியிடம் பழகி ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிறுவலூர் காவல் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என புகார் கொடுத்திருந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் காணாமல் போன சிறுமியை அவருடன் பழகி வந்த விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டு திருப்பூரில் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கியிருப்பதாக தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த விக்னேஷ், தன்னுடன் அழைத்துச் சென்ற சிறுமியை திரும்பக் கொண்டு வந்து அவரை அவரது வீட்டில் விட்டுவிட்டு செல்வதற்காக இன்று வந்தபோது சிறுவலூர் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுமியை விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது உறுதியானது. மேலும் விக்னேஷை சிறுவலூர் காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் சுபாஷ் விக்னேஷ் கைது செய்து, ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!