கோபிசெட்டிபாளையம் அருகே மொபட் திருடிய இளைஞர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே மொபட் திருடிய இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட சுபாஷ்.

கோபி அருகே டி.என்.பாளையத்தில் நண்பரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு வந்தவரின் மொபட்டை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே சத்தி-அத்தாணி சாலையில் உள்ள மாதையன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவர், சம்பவத்தன்று டி.என்.பாளையம் அண்ணாசிலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை அனுமன்நகரில் உள்ள நண்பரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு மொபட்டில் வந்துள்ளார். பின்னர், சாலையில் மொபட்டை நிறுத்தி விட்டு நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் திருட்டு போனது.

இதுகுறித்து ரவி அளித்த புகாரில் பேரில் மொபட்டை திருடிய மர்ம நபரை பங்களாப்புதூர் போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், இன்று காலை பங்களாப்புதூர் போலீசார் கொங்கர்பாளையம் குமரன் கோவில் மலையடிவாரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மொபட்டில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தனர். கொங்கர்பாளையம் சாவடி வீதியை சேர்ந்த அய்யப்பன் மகன் சுபாஷ் (21) என்பதும், ரவியின் மொபட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!