அந்தியூர் அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

அந்தியூர் அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X

கைது செய்யப்பட்ட சந்தோஷ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மறவன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். தனியார் பெட்ரோல் பங்க் ஊழியரான இவர், அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 28ஆம் தேதி கடத்தி சென்றுள்ளார். இதன் பின்னர், மாணவியின் பெற்றோர் மாணவியை காணவில்லை என அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!