கம்மங்கூழ் கடையில் 5 பவுன் நகை திருடிய வாலிபர் மாயம்

கம்மங்கூழ் கடையில் 5 பவுன் நகை திருடிய வாலிபர் மாயம்
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கம்மங்கூழ் கடையில் 5 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கருங்கரடை சேர்ந்தவர் பூங்கொடி (55). இவர் அத்தாணி ரோட்டில் கம்மங்கூழ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வங்கியில் அடமானம் வைக்க தனது வீட்டில் இருந்து 5 பவுன் தங்க நகையை எடுத்துக்கொண்டு கடைக்கு வந்தார். பின்னர் அந்த நகையை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்து விட்டு வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் பூங்கொடியிடம் 20 பேர் குடிக்கும் அளவுக்கு கம்மங்கூழ் வேண்டும் என்று கேட்டார்.

இதையடுத்து பூங்கொடி பெரிய பாத்திரம் எடுக்க தனது வீட்டிற்கு சென்றார். அந்த நேரத்தில் வாலிபர் பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு சென்று விட்டார். பூங்கொடி பாத்திரம் எடுத்துக் கொண்டு வந்து பார்த்த போது அந்த வாலிபரையும் காணவில்லை. தான் வைத்திருந்த நகையையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!