சித்தோடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

சித்தோடு அருகே பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியை சேர்தவர் கார்த்திபன் (வயது 29). பேக்கரி பொருள்கள் தயாரித்து ஊர் ஊராக விற்பனை செய்து வரும் தொழில் நடத்தி வந்தார். கடந்த 6 மாதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் ஈரோடு சென்று பணம் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார்.

பின் வாட்ஸ் அப்பில் ஏதோ தகவல் போட்டிருப்பதாக உறவினர் ஒருவரின் போன் மூலம் குடும்பத்தாருக்கு தகவல் தெரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கார்த்திபன் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் சென்று பார்க்கும் போது இரும்பு ஆங்கிலில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சித்தோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கார்த்திபன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!