பவானி அருகே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சாவு

பவானி அருகே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சாவு
X

பைல் படம்

பவானி அருகே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்திற்குட்பட்ட முதலியார் வீதியை சேர்ந்தவர் மணிமாலா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 4ஆம் தேதி சிவராத்திரி பூஜைக்கு அழைப்பது தொடர்பாக மணிமாலாவிற்கும், அவரது குடும்பத்தில் உள்ளவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், கோபித்து கொண்டு வீட்டினுள் சென்ற மணிமாலா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள் மணிமாலாவை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது தாயார் மாதேஸ்வரி அளித்த புகாரில் பேரில், சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!