அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு உயர் கல்வித்துறையின் அறிவிப்பின் படி 2022 -2023ம் ஆண்டிற்கான சேர்க்கை இன்று தொடங்கியது. பி.ஏ. தமிழ் பி.ஏ. ஆங்கிலம். பி.எஸ்.சி.கணிதம். பி.எஸ்.சி. கணினி அறிவியல், .பி.காம். இந்த பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.
இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பக்கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் DD-யாக அளிக்கலாம். மாணவர்கள் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விபரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu