சர்வதேச யோகா தினம்: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினம்: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற யோகா பயிற்சியினை கல்லூரி முதல்வர் வாசுதேவன் தொடங்கி வைத்து பேசிய போது எடுத்த படம்.

10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

Erode News, Erode Today News - சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈரோடு திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யோகா பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் தொடங்கி வைத்தார்.


இதில், யோகா குரு ஸ்ரீநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியப்படை மாணவ, மாணவியர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்தார். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.


இப்பயிற்சிக்கு, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை கேப்டன் ஆ.ரா.கார்த்திகேயன், மேஜர் நா.கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

இப்பயிற்சியில், 15 தமிழ்நாடு பெட்டாலியனை சேர்ந்த தேசிய மாணவர் படையின் அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!