ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து நவ. 17, 18ல் கடையடைப்பு

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து நவ. 17, 18ல் கடையடைப்பு
X
நூல் விலை உயர்வை கண்டித்து, நலம்பர் 17, 18 தேதிகளில், ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கே.கலைசெல்வன் கூறியதாவது: தேசிய அளவில் ஜவுளி சார்ந்த தொழிலில், பல கோடி பேர் உள்ளனர். அண்மைக் காலமாக நூல் விலை அடிக்கடி உயர்வதால், இத்தொழில் சார்ந்தவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 40 நாள்களில் 40 ஆம் எண் நூல் ஒரு கிலோ ரூ. 250இல் இருந்துரூ 330ஆகவும், 30ஆம் எண் நூல் ரூ 200இல் இருந்து ரூ. 290ஆகவும், 20ஆம் எண் நூல் 140இல் இருந்து ரூ, 190 ஆகவும் வெப்ட் வகை நூல் 40ஆம் எண் ஒரு பை ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரத்து 200ஆகவும் உயர்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜவுளி ஆர்டர் பெற்றவர்கள் நூல் விலை உயரும்போது அதனை பெற்ற தொகைக்குள் முடிக்க முடியாமல் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.

எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, நூல் விலையை இரண்டு மாதம் அல்லது மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த வேண்டும். தினமும் உயர்த்தும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் 17, 18 ஆம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த கடைகள், ஜவுளிக் கிடங்குகள் போன்றவை பங்கேற்கும் என்றார்.

Tags

Next Story
ai healthcare technology