ஈரோட்டில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோட்டில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு ஊர்வலம்
X

ஈரோட்டில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடந்தது.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இந்த ஊர்வலத்தை ஈரோடு டி எஸ் பி ஆறுமுகம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மருத்துவமனை தலைவர் டாக்டர் தங்கவேலு மற்றும் இயக்குனர் சரவணன், டாக்டர் பூர்ணிமா முன்னிலை வகித்தனர். சர்க்கரைநோய் ரத்த கொதிப்பு மற்றும் சிறுநீரகத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவ மாணவிகள் ஏந்தி வந்தனர். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மருத்துவமனையை அடைந்தது. இதில் விஐடி கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

ஊர்வலம் குறித்து டாக்டர் சரவணன் கூறியதாவது, உலகம் முழுவதும் மார்ச் ஒன்பதாம் தேதி உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. 40 வயது கடந்தவர்கள் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் கிரியாட்டின் அளவை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு கவனத்துடன் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு அதிக அளவில் உடல்பாதிப்பை ஏற்படுத்துவதையும் தடுக்கலாம் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!