அந்தியூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
X

ராமன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மின்சாரம் தாக்கியதில், தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்தியூர் அருகே மின்சாரம் தாக்கியதில், தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 32). இவர் பருவாச்சியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், ராமன் நேற்று மாலை 3 மணி அளவில் தனது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவதற்காக மின்மோட்டார் சுவிட்சை 'ஆன்' செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ராமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story