அம்மாபேட்டை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்

அம்மாபேட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் குணசேகரன் (32). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.இந்தநிலையில் குணசேகரன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார். தொடர்ந்து அவர் தான் விஷம் குடித்ததை வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார்.

இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் குணசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா