அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாப பலி

அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாப பலி
X

பைல் படம்.

அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் ஜரத்தல் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் ஜரத்தல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 50). இவர் விவசாயகூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அனைவரும் முனுசாமியை தேடி வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள சின்னத்தம்பான் என்பவர் தோட்டத்தில் கிணற்றின் அருகில் அவரது செருப்பு இருப்பதை பார்த்து அவரது உறவினர்கள் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்தியூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி முனுசாமியின் உடலை தேடினர்.

அப்பொழுது, முனுசாமி உயிரிழந்த நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அங்கு விரைந்து சென்ற வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமி உடலை கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முனுசாமிக்கு சித்ரா என்ற மனைவியும், விஜய் என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!