கள்ளிப்பட்டியில் கலைஞரின் சிலை அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் ஆய்வு

கள்ளிப்பட்டியில் கலைஞரின் சிலை அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் ஆய்வு
X

கள்ளிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி,. ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணியானது, தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி, பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து, வீட்டு வசதிக் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. நல்லசிவம், செயலாளர் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், ஆய்வின் போது கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வரும் இடம், முதலமைச்சர் வந்து செல்லும் வழி, பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடம், அதற்காக நடைபெற்று வரும் பணிகளையும் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.இதில், டி.என். பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சிவபாலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!