அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால், அருகாமையில் உள்ள தோட்டத்திற்கு நடுவே மற்றும் போர்வெல் பைக் மூலம் குடிநீர்த் தேவைகளை பொதுமக்கள் பூர்த்தி செய்து வந்தனர்.இதுகுறித்து கெட்டிசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல முறை புகார் கூறியும் ஊராட்சியின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் அந்தியூர்- பர்கூர் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் அந்தியூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் அந்தியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி .வெங்கடாசலம், சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கிராம ஊராட்சித் தலைவரை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. விடம் கூறினர்.இதையடுத்து குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் கூறியதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai automation in agriculture