/* */

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு
X
யானை தாக்கி உயிரிழப்பு (பைல் படம்).

Erode News, Erode Today News - தாளவாடி அருகே கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த காட்டு யானைகள், பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து, விவசாயத் தோட்டங்களில் உள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது

இந்நிலையில், தாளவாடி அருகேயுள்ள ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜோராஒசூர் கிராமத்தில் சுந்தரி (வயது 43) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை எதிர்பாராத விதமாக அவரை தாக்கியது. இதில், அவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுந்தரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஜீரகள்ளி வனத்துறையினர் மற்றும் தாளவாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 April 2024 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது