கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

தீர்த்தாம்பாளையத்தில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவூயூரை சேர்ந்தவர் சிவக்குமார் மகள் தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மங்கரசு வளையபாளையத்தை சேர்ந்த சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு தமிழ்செல்வி வந்துள்ளார். அங்கு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆன நிலையில், இளம்பெண் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, கோபி டிஎஸ்பி ஆறுமுகம், மற்றும் கோட்டாட்சியர் பழனிதேவி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி