திங்களூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

திங்களூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
X

பைல் படம்

திங்களூர் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே உள்ள நல்லாம்பட்டி ஆலாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி . இவரது மனைவி கௌசல்யா. இவர் வெள்ளங்கோயில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். கௌசல்யா வழக்கமாக வேலைக்கு செல்லும் வேன் டிரைவரிடம் நண்பராக பழகி வந்துள்ளார். இதனை அவரது கணவர் நல்லசாமி கண்டித்துள்ளார்.

இதனால், மனவேதனையில் இருந்து வந்த கௌசல்யா, வீட்டின் பின்புறம் சென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கௌசல்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!