பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

பைல் படம்

பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருமுகை வளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ரேவதி (வயது 48). இவர் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டையில் ஒரு தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி வேலை முடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் ரேவதியை தேடி வந்தனர்.

அப்போது அவர்கள் குடியிருந்து வரும் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ரேவதி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ரேவதி கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!