ஈரோடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

X
பைல் படம்.
By - S.Gokulkrishnan, Reporter |19 Dec 2021 5:27 PM IST
ஈரோடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை, நாதகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். அவரது மனைவி சுசீலா (வயது 48). சுசீலா கூலி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று, ஆடுகளை மேய்ப்பதற்காக சுசீலா தம்பி தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குணசேகரன் உறவினர்கள் வீடு, அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர்.
பின்னர் தோட்டத்தில் சென்று பார்த்தபோது, அங்கு உள்ள ஒரு கிணற்றில் சுசீலா தவறி விழுந்தது தெரியவந்தது. உடனே அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu