ஈரோட்டில் கறி குழம்பு சாப்பிட பெண் திடீர் பலி

ஈரோட்டில் கறி குழம்பு சாப்பிட பெண் திடீர் பலி
X

கோவிந்தம்மாள்

ஈரோட்டில் கறி குழம்பு சாப்பிட பெண் உயிரிழந்தது, குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அசோகபுரி கோடைபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 50). இவர்களது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு சாமிநாதனும், கோவிந்தம்மாளும் வீட்டில் கறி குழம்பு சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் கோவிந்தம்மாள் வாந்தி எடுத்து மயக்கமடைந்து விழுந்து உள்ளார்.

உடனே அவரை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கோவிந்தம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி