5 சதவீதம் ஊக்கத்தொகை அறிவிப்பு: ஈரோடு மாநகராட்சியில் ரூ.14 கோடிக்கு வரி வசூல்!

5 சதவீதம் ஊக்கத்தொகை அறிவிப்பு: ஈரோடு மாநகராட்சியில் ரூ.14 கோடிக்கு வரி வசூல்!
X
5 சதவீதம் ஊக்கத்தொகை அறிவிப்பால், ஈரோடு மாநகராட்சியில் ரூ.14 கோடிக்கு வரி வசூலானது.

5 சதவீதம் ஊக்கத்தொகை அறிவிப்பால், ஈரோடு மாநகராட்சியில் ரூ.14 கோடிக்கு வரி வசூலானது.

ஈரோடு மாநகராட்சி கடந்த ஆண்டு வரி வசூலில் தமிழகத்திலேயே 3-வது இடத்தை பிடித்தது. நடப்பு ஆண்டில் முதல் அரையாண்டுக்கான வரியை கடந்த மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் ஆர்வமாக வந்து வரியை செலுத்தினர்.

கடந்த ஒரே மாதத்தில் 33 ஆயிரத்து 664 பேர் வரி செலுத்தினர். இதன் மூலமாக ரூ.14 கோடியே 16 லட்சத்து 34 ஆயிரத்து 192 வசூலானது. இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 127 பேர் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் வரியை செலுத்தி உள்ளனர். இதன் மூலமாக ஒரே நாளில் மொத்தம் ரூ.2 கோடியே 96 லட்சம் வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story