சத்தி புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்
X
பைல் படம்.
By - S.Gokulkrishnan, Reporter |18 Dec 2021 4:00 PM IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், கடம்பூர், கேர்மாளம், தலமலை, ஆசனூர், விளாமுண்டி, டி.என்.பாளையம், அருள்வாடி, தாளவாடி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கி நடக்கிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu