காட்டு யானை அட்டகாசம்-300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

காட்டு யானை அட்டகாசம்-300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்
X
பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து 300க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வெளியேறி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள விவசாயி செல்வன் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300க்கும் மேற்பட்ட ஜி9 ரக வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.


இது குறித்து தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர். பின்னர, காட்டு யானை விளை நிலத்தில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!