அம்மாபேட்டை அருகே மனைவி, குழந்தை மாயம்: கணவர் போலீசில் புகார்

அம்மாபேட்டை அருகே மனைவி, குழந்தை மாயம்: கணவர் போலீசில் புகார்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை பகுதியில் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என கணவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே காடப்பநல்லூர் அடுத்துள்ள வெற்றிலைக்காரன் தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவருக்கு கோமதி (வயது 28) என்ற மனைவியும், தரணிஸ்ரீ (வயது 8)என்ற மகளும் துபிஷன் என்ற 10 மாத குழந்தையும் உள்ளனர் .சரவணன் கடந்த 2 ஆண்டுகளாக, தனது மனைவியின் தாய் வீடான நசியனூர் பகுதியில் குடியிருந்து கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரவணன் கோமதி மற்றும் குழந்தைகளுடன் காடப்பநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தனர்.

பிறகு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோமதி தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று கோமதி மற்றும் குழந்தைகளுடன் காடப்பநல்லூர் வீட்டுக்கு வந்துள்ளார். தகவல் அறிந்த சரவணன் தனது மனைவி குழந்தைகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தனது அப்பாவிடம் மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் 10 மாத கைகுழந்தையை விட்டு விட்டு மகளுடன் கோமதி சித்தார் பேங்க் வரை சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார், இன்னும் வரவில்லை என கூறியுள்ளார்.

உடனடியாக சரவணன் சித்தார் பேங்க் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோமதி மற்றும் தனது மகளை தேடி உள்ளார். மேலும் இரவு ஆகியும் எங்கும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் வீடுகளிலும் விசாரித்துள்ளனர். அங்கும் வராததால் தனது மனைவி மற்றும் மகளை தருமாறு கண்டுபிடித்து சரவணன் அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதியையும் குழந்தையையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!